Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படத்தின் இசைப்பணி தொடங்கியது - வெங்கட் பிரபு பதிவு!

03:03 PM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் இசைப்பணி தொடங்கியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'தி கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு 'தி கோட்' படத்தின் இசைப்பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :
actorvijaygoatGreatestOfAllTimeThalapathy68VenkatPrabhuvijay
Advertisement
Next Article