Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தங்கலான்’,'அமரன்’,‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட 4 திரைப்படங்களின் அப்டேட்டுகளை வாரி வழங்கிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்!

09:27 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

'அமரன்’, ‘தங்கலான்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ திரைப்பட அப்டேட்களை இந்தப் படங்களின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார்.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்டப் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்தப் படங்களின் அப்டேட்ஸை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட்ஸை அள்ளி வழங்கியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், ‘’லக்கி பாஸ்கர்’, ‘தங்கலான்’ படங்களின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் முடிவடைந்துள்ளது. தயாரிப்பாளர்களிடமும் இதனைக் கொடுத்துவிட்டேன். சீக்கிரம் சந்திப்போம்’ எனக் கூறியுள்ளார். இதோடு விடாமல் ‘அமரன்’ மற்றும் தனுஷ் இயக்கத்தில் வெளியாகக் காத்திருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தின் பாடல்கள் பற்றியும் ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர்.

இதற்கு ஜிவி பிரகாஷ், ‘’அமரன்’ படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தயாரிப்பாளர்களின் அப்ரூவலுக்காகக் காத்திருக்கிறேன். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. இது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Tags :
cinemaDulquer Salmaanfirst singleGV PrakashkumarLucky Baskharmovienews7 tamilNews7 Tamil Updatesthangalaanvikram
Advertisement
Next Article