சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த 2வது வங்கதேச வீரர் #MushfiqurRahim!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 11ஆவது சதத்தினை நிறைவு செய்துள்ளார்.
வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2022 ஆம் ஆண்டு அறிவித்தார். ஆசியக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து ஓய்வை அறிவித்தார். தான் ஆசைப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை என முஷ்ஃபிகுர் ரஹிம் சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமானவர் முஸ்பிஹூர் ரஹீம். வங்கதேச அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். 37 வயதாகும் முஷ்ஃபிகுர் ரஹிம் தற்போது தனது 89-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் தனது 11ஆவது சத்தை நிறைவு செய்துள்ளார்.
டெஸ்ட்டில் 5,820 ரன்களை கடந்துள்ளார். முதல் டெஸ்டில் 4ஆம் நாளில் வங்கதேச அணி 140 ஓவர் முடிவில் 462/6 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது . முஸ்தபிகுர் ரஹீம் 148 ரன்களுடனும் மெஹதி ஹசன் 42 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த 2வது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.