Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசியாவின் பில்லியனர் தலைநகரான மும்பை!

12:02 PM Mar 26, 2024 IST | Web Editor
Advertisement

ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. 

Advertisement

சமீபத்தில் ஹுருன் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி,  ஆசியாவிலேயே அதிக பில்லியனர்களை கொண்ட நகரமாக மும்பை உள்ளது.  மேலும் உலகளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.  டெல்லி பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.  இந்தியாவின் நிதி தலைநகரம் மும்பை.  பங்கு சந்தை,  பாலிவுட்,  சர்வதேச நிதி நிறுவனங்கள் என தொழில்துறையும்,  பொருளாதாரமும் மும்பையில் குவிந்து இருக்கிறது.  இந்த ஆய்வின்படி மும்பையில் 92 பில்லியனர்கள் உள்ளனர்.

இந்தியாவில் 217 பில்லியனர்கள் உள்ளனர்.  சீனாவில் 814 பில்லியனர்கள் உள்ளனர்.  ஆனால்,  மும்பையில் 97 பேரும்,  பெய்ஜிங்கில் 91 பேர் உள்ளனர்.  இதனால் ஆசியாவில் மும்பை முதலிடத்தில் உள்ளது.  உலகளவில் முதலிடத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்ளது.  நியூயார்க்கில் 119 பில்லியனர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இரண்டாவது இடத்தில் லண்டன் உள்ளது.  இங்கு 97 பில்லியனர்கள் உள்ளனர்.  மும்பையில் மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு $445 பில்லியனாக உள்ளது.  இது முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு 47% அதிகரித்துள்ளது.  நாட்டின் 67% பில்லியனர்கள் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் வசிக்கின்றனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி,   குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட பில்லியனர்கள்  மும்பையில் வசித்து வருகின்றனர்.  டெல்லியில் HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் வசித்து வருகின்றனர்.  அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அகமதாபாத்தில் வசித்து வருகிறார்.  சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா புனே நகரில் வசிக்கிறார்.

Tags :
Asia’s Billionaire CapitalGlobal Rich ListHurunMumbai
Advertisement
Next Article