ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணம் : ரஜினிகாந்த்தின் டான்ஸால் உற்சாகமடைந்த பிரபலங்கள்!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றது என்றாலும், கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்தனர்.
இதையும் படியுங்கள் : “தன்னைக் காண வேண்டுமெனில் ஆதார் கட்டாயம்” – கங்கனா ரனாவத்தின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் நேற்று (ஜூலை 12) திருமண விழாவுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து இந்தி பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடினார். அவருடன் பாலிவுட் பிரபலங்களான அனில் கபூர் மற்று ரன்வீர் சிங் ஆகியோரும் டான்ஸ் ஆடினர். தற்போது ரஜினியின் இந்த டான்ஸ் வீடியோ இணையத்தை வைரலாகி வருகிறது.