Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

142 அடியை நெருங்கிய முல்லைப் பெரியாறு அணை..!! -கேரள பகுதிக்கு 2ம் வெள்ள அபாய எச்சரிக்கை...

06:59 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 142
அடியை எட்டியதால் கேரள முல்லைப் பெரியாற்று கரையோர பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணி துறையினர் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி,
திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் விவசாய பாசனம்
மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த வாரங்களில் அணையின்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக
இருந்தது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1230 கன அடிக்கு மேல் வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 7மணிக்கு 142 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு
வினாடிக்கு 1300 கன அடி ஆகும். அணையில் தற்போது 7396 மில்லியன் கன அடி நீர்
இருப்பு உள்ளது.

நேற்று இரவு 7மணிக்கு 142அடியை எட்டிய நிலையில் கேரள மாநில முல்லைப் பெரியாறு கரையோர பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் உள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சம்பாத்துக்கடவு, உள்ளிட்ட பகுதிகளுக்குத் தமிழக அரசு பொதுப்பணித்துறையானர் சார்பில் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Next Article