Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

4 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி!

09:42 AM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 4  ஆண்டுகளாக சம்பளம் பெறாமல் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் பங்காற்றி வருகிறது. இந்த குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி உள்ளார். கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி, அவரின் தந்தை திருபாய் அம்பானி 2002-இல் மறைந்த பிறகு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஆண்டுக்கு ரூ.15 கோடியை சம்பளமாகப் பெற்று வந்தார். இதனிடையே 2020-ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், நிறுவனத்தில் இருந்து சம்பளம் பெறுவதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. ரிலையன்ஸ் குழுமத்தின் நிதிநிலை அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பத்துக்கு 50.33 சதவீதம் பங்குகள்
உள்ளன. முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு 2023-24-இல் ஈவுத்தொகை மட்டும் ரூ.3,322.7 கோடி கிடைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, நிறுவனத்தில் இருந்து ரூ.99 லட்சமும், அவரின் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் தலா ரூ.1 கோடியும் ஊதியம் அல்லாத பிறவகை பணப் பலன்களாகப் பெற்றுள்ளனர்.

Tags :
Mukesh ambaninita ambaniRelianceSalary
Advertisement
Next Article