Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முகேஷ் அம்பானி!

04:35 PM Feb 22, 2024 IST | Web Editor
Advertisement

சாட்ஜிபிடி போன்ற பிரபலமான ஏஐ தொழில்நுட்பங்களுக்கு போட்டியாக ஹனுமான்  என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ தொழில்நுட்பத்தை (AI) முகேஷ் அம்பானயின் ரிலையன்ஸ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.  ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,  சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி ஏஐ போன்ற ஏஐ மாடலுக்கு போட்டியாக ஹனுமான் (hanuman) என்ற ஏஐ மாடலை உருவாக்கியுள்ளது.  11 மொழி திறன் மற்றும் படைப்பு உள்ளடக்கத்தை உருவாக்கும் திறன் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது.  இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தை முகேஷ் அம்பானி கடந்த செவ்வாய்க் கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செய்யறிவுத் தொழில்நுட்பத்தில் வெறும் எழுத்து வடிவிலான உரையாடல்கள் மட்டுமின்றி,  குரல் மற்றும் காணொலிகள் வாயிலாக தகவல் பறிமாற்றம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஹனுமான் ஏஐ தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது எனவும் மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
aiArtificial IntelligenceChatGPTHanumanHanuman AIMukesh ambani
Advertisement
Next Article