மஞ்சுமெல் பாய்ஸ் முதல் சைத்தான் வரை ... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதை பற்றி காணலாம்.
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'.
இத்திரைப்படம், வருகிற மே 5 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. இதேபோல், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமான ‘தி பாய்ஸ்’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார், ஷாரா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவான கார்டியன் திரைப்படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டியர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான ஹிந்தி மொழி திரைப்படமான சைத்தான் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் மே 4-ல் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய ஹிந்தி மொழி இணையத் தொடரான ஹீராமண்டி தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.