சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல் லைட் செயல்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல்லைட் ஒளி இல்லாததால் சுங்கச்சாவடி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சிக்னல் லைட் செயல்படாததால் மூன்று மாத காலம், தமிழக ஆந்திர எல்லைப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள்.