Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அம்மாவின் சமையல் to மதர் போர்டு சமையல்! கவனம் ஈர்த்த ஐடி ஊழியர் வெளியிட்ட வீடியோ!

09:35 PM Mar 09, 2024 IST | Web Editor
Advertisement

ஐ.டி ஊழியர் ஒருவர் சிபியூவில் சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் பார்க்க விசித்திரமாவும், நம்ப முடியாததாகவும் இருக்கும். நாம் பல வீடியோக்களில் பல முறைகளில் உணவு தயாரிப்பதை பார்த்துள்ளோம். வெயில் காலங்களில் இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை சுடுவது போன்ற வீடியோக்களை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. ஐ.டி. ஊழியர் ஒருவர் கணினியின் சிபியூ பகுதியில் ஆம்லேட் மற்றும் ஆலூ பரோட்டா செய்யும் வீடியோதான் அது. சிரஞ்சியின்  மூலம் முட்டையை இடுவது, பரோட்டா மாவை சிறிதாக வைத்து பொன்னிறாமாக எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பான செயல்முறை விளக்கத்தையும் அவர் வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், கல்யாண ஆர்டர் எல்லாம் எடுப்பீங்களா என நகைச்சுவையாக கேட்டுள்ளார். மற்றொருவர் இன்ஸ்டாவின் மாஸ்டர் செஃப் என பதிவிட்டுள்ளார். சிபியூ விற்பனைக்கு வருமா என ஒருவர் கேட்டுள்ளார்.

Tags :
#it staffcomputerCookingCPUinstagramOmlet
Advertisement
Next Article