Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

4 வயது மகனை கொலை செய்த பெண் CEO! காரணம் குறித்த வெளியான அதிர்ச்சித் தகவல்!

04:36 PM Jan 10, 2024 IST | Web Editor
Advertisement

கோவாவில் 4 வயது மகனை கொலை செய்த தாய் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பெங்களூரில் ஸ்டாா்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரியும் சுசனா சேத் (39) என்ற பெண் திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-இல் கணவரைப் பிரிந்துள்ளாா்.  இந்நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன் தனது 4 வயது மகனுடன் கோவா சென்று அங்குள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா்.  அங்கு 3 நாள்கள் தங்கியிருந்த பிறகு கோவாவிலிருந்து பெங்களூருக்கு காரில் செல்ல,  வாடகைக் காா் ஏற்பாடு செய்து தருமாறு விடுதியினரிடம் கேட்டுள்ளாா்.

வாடகைக் காா் பயணம் விமானத்தில் செல்வதைவிட மிகவும் அதிகம் என்று விடுதியாளா் கூறியும் வாடகைக் காா்தான் தேவை என சுசனா வலியுறுத்தியிருக்கிறார்.  எனினும் அந்த காரில் மகன் இல்லாமல் அவா் பெங்களூருக்குப் புறப்பட்டாா்.  இதனால் சந்தேகமடைந்த விடுதியாளா்,  அவா் தங்கியிருந்த அறைக்குச் சென்று பாா்த்தபோது ரத்தக் கறை இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து காவல்துறையினருக்கு விடுதியாளா் விரைந்து தகவல் அளித்தாா்.  இதற்குள் கோவா எல்லையைக் கடந்து கா்நாடகத்துக்குள் காா் சென்றுவிட்ட நிலையில்,  சுசனா சென்ற வாடகைக் காரின் ஓட்டுநருடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய காவல்துறையினர்,  அருகில் உள்ள காவல் நிலையத்துக்குள் காரை ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

காவல் நிலையத்தில் சுசனா சேத்தின் உடைமைகளை சோதனை செய்தபோது,  பெட்டியில் 4 வயது மகனின் உடல் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.  இதையடுத்து, சுசனா சேத்தை கா்நாடக மாநிலம் சித்ரதுா்கா காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கோவாவுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  இதில், விவாகரத்து வழக்கின் தீர்ப்பில், மகனை சந்திக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  இதனால் விரக்தி அடைந்த சுசனா,  மகனை தந்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார். கணவன் மீதிருந்த கோபம்,  பெற்ற மகனை தாயே கொலை செய்யும் அளவுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
#murderedBengaluru company CEO caseGoanews7 tamilNews7 Tamil Updatesstartup CEOSuchana Seth
Advertisement
Next Article