Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

04:49 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று ராம்ராஜ் காட்டன்,  ஆச்சி மசாலா நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,  1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலமாக 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும்,  ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இதே போல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகத் தொழிலாளர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் அதிபர் அம்பானி கொண்ட நிலையில் அந்நிறுவனம் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது.

இந்நிலையில், தற்போது ரூ.1,75,000 லட்சம் கோடி மதிப்பிலான எரிசத்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.  இதன் வாயிலாக, 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதே போன்று, ராம்ராஜ் நிறுவனம் ஜவுளித்துறையில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.  இதன் வாயிலாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.  ஆச்சி மசாலா நிறுவனத்தை பொறுத்தவரை 100 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம் 42,768 கோடி முதலீட்டிறகான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  இதன் மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘feng tag’ காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்யவுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் 2-வது நாளில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன் மூலம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Aachi masalaChennaiDMKGlobal investors meetGlobal Investors Meet 2024MK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPiyush GoyalRamraj CottonTamilNaduTNGIM2024TRB Rajaa
Advertisement
Next Article