தமிழ்நாட்டில் 9,000-ஐ தாண்டிய Start-Up நிறுவனங்கள்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7006 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தெரிவித்துள்ளது.
புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டு காலத்தில் மட்டும் 7006 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது. இந்நிலையில் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4446 ஆக உயர்துள்ளது. கிட்டதட்ட மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 9038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியிலோ, சேவையிலோ புதுமையைப் பயன்படுத்தி களத்தில் நிலவும் சிக்கலுக்கு தொழில்நுட்பத்தின் துணையோடு தீர்வு காணும் முறையே புத்தொழில் என கூறப்படுகிறது.