Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குரங்கு அம்மை தொற்று - #India ல் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

05:44 PM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்பட்டும் இந்த நோய் ஆப்ரிக்கா நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் இது மனிதர்களிடையே பரவும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும்.

மங்கி பாக்ஸ் தடுப்புக்கான மருந்தை டென்மார்க்கின் பவேரியன் நோர்டிக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் 2 டோஸ் குரங்கு அம்மை பாதிப்பை 85%- 90% வரை தடுக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவை பொறுத்தவரை சீரம் நிறுவனம் இதற்கான வேக்சினை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மேலும் டெல்லியில் 3 மருத்துவமனைகள் குரங்கு அம்மை பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்திருந்த நிலையில் அதன் மூலம் இந்த தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
African CountriesIndiaM PoxMonkey pox
Advertisement
Next Article