Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதலர் தினத்தில் மலையாள ரசிகர்களை கவர்ந்த மோனலிசா!

கும்பமேளா வைரல் மோனாலிசா தனது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
09:46 AM Feb 15, 2025 IST | Web Editor
Advertisement

உத்தரப் பிரதேச மாநில கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா, சோஷியல் மீடியாவில் வேகமாக வைரல் ஆனார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.

Advertisement

இந்நிலையில் கேரளா மாநிலம் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் மோனலிசா கலந்து கொள்வதாக நகை கடை நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுருந்தது. இதையடுத்து மோனலிசாவை பார்ப்பதற்காக ஆவலுடன்  கடை முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோனாலிசா இளஞ்சிவப்பு நிற
லெஹங்காவில் டான்ஸ் ஆட ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டிருக்கின்றனர். பின்னர் மேடையில் “எல்லோரும் நல்லா இருக்கீங்களா” என்று மலையாளத்தில் பேச தொடங்கிய மோனாலிசா, என்னை எந்த அளவுக்கு மக்கள் போற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு நான் அவர்களின் ரசிகையாக இருப்பேன் என்று கூறி, அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து பேசிய நகைக் கடை அதிபர் பாபி, “கும்பமேளாவில் பேமஸான மோனாலிசா இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மலையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டிருக்கிறார். கும்பமேளாவின் வைரம் தற்போது பாபி செம்மனூர் குழுமத்தின் வைரமாக மாறியிருக்கிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் கும்பமேளாவுக்கு போக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மோனாலிசாவுக்கு பாபி, வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags :
Chemmannur showroomGirl of KumbhInaugurationMonalisa Bhosle
Advertisement
Next Article