“மீண்டும் மோடிதான் பிரதமராவார்..!” - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு
நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :
“கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி. என்.டி.ஏ. கூட்டணியில் தான் எங்கள் அணி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இந்த அணியை விட்டு வெளியே சென்றுள்ளார். இதையும் படியுங்கள் :
தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கும். அதிமுகவின் பெயருக்கு பங்கம் விளைவிக்க முயலும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.”
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.