வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி - ராகுல் கடும் தாக்கு...!
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடயே அடுத்த மாதம் 6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்களான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகும் காந்தியும் முதல்வர் வேட்பாளரான ஆர்டிஜே கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியது,
"பிரதமர் மோடிக்கு உங்கள் வாக்குகள் மட்டுமே தேவை. நீங்கள் பிரதமரிடம் நடனமாடினால் நாங்கள் உங்களுக்கு வாக்களிப்போம் என்று சொன்னால் நிச்சயம் அவர் நடனம் ஆடுவார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் நடத்தப்படுகிறது என்பது மாயை. இந்த அரசாங்கம் பாஜகவால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தப்பகிறது.
காங்கிரஸ் வலியுறுத்தலின் பேரில்தான் மோடி அரசு சாதி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டது. இரண்டு இந்தியாக்கள் உருவாகி வருகின்றன. ஒன்று சாமானிய மக்களுக்கு சொந்தமானது, மற்றொன்று பில்லியனர்களுக்கு சொந்தமானது. பீகார் போன்ற இடங்கள் வறுமையில் வாடுவதற்கு இதுவே காரணம். அதன் ஆற்றல் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
மக்களுக்கு வேலை வழங்க முடியாது என்பதால், ரீல்கள் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (மலிவான இணையதளமானது ஏழைகளுக்கும் சமூக ஊடகங்களை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது என்று முன்பு பிரதமர் மோடி கூறியிருந்தார்)”