Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாடாளுமன்ற தேர்தலில் #DMKவின் வெற்றிக்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

09:56 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் நரேந்திர மோடிதான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக பவள விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 75 வயது
நிரம்பியோருக்கு நிதியுதவி, சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் 60 வயதைக்
கடந்த 1000 நபர்களுக்கு நிதியுதவிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாவது;

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் நரேந்திர மோடிதான். அவர்தான் திமுகவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். நான் 23 நாட்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் சந்தித்த மக்கள் அனைவரிடமும் பாஜக மீது வெறுப்பு இருந்தது. அதை தொடங்கி வைத்தது மோடிதான். தமிழ்நாட்டில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளின் போது ஒருமுறை கூட வராத மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு 8 முறை முறை பிரச்சாரத்திற்காக வந்தார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் அதற்கான உதவித் தொகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்ளது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. ஆனால், மத்திய அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை. ஜிஎஸ்டி வரியாக 1 ரூபாய் வழங்கினால், அதற்கு 28 பைசா மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். இது போன்றவற்றை மக்கள் உணர்ந்ததன் காரணமாகவே திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.

2வது காரணம், மகளிருக்கு திமுக வழங்கிய கட்டணமில்லா பேருந்து திட்டம். கடந்த மூன்றரை ஆண்டுகளில் 520 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு மகளிரும், ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் சேமிக்கின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 1-5 வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகள் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கியுள்ளன.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய், தமிழ் புதல்வன் திட்டத்திலும்
மாதம் 1000 ரூபாய் என திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்தனர். ஆனால் 1 கோடி 16 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3வது காரணம், திமுக உறுப்பினர்களாகிய நீங்கள் தான். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி கூட்டணி அமைக்கிறது. அந்த கூட்டணியை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்கிறார். கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவின் உடன்பிறப்புகளாகிய நீங்கள்தான் அதற்கும் காரணம் என முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், நாம் அனைவரும்
உழைக்க தயாராக இருக்க வேண்டும். திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு
சேர்க்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிக்கு செல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும்,
பொறாமையாகவும் இருக்கும். நான் பெரியாரை நேரில் பார்த்தது இல்லை. அண்ணாவை
நேரில் பார்த்தது இல்லை. ஆனால், நீங்கள் அவர்களை நேரில் பார்த்து இருப்பீர்கள். அதனால் எனக்கு உங்கள் மீது பொறாமையாக உள்ளது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் மறு உருவமாக உங்கள் அனைவரையும் நான் பார்க்கிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
DMKNarendra modiparliamentary ElectionUdhayanithi Stalin
Advertisement
Next Article