Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோடி, அதானி முகமூடி அணிந்து நாடகம்... ராகுல் காந்தியின் கேள்விகளால் நாடாளுமன்ற வளாகத்தில் சிரிப்பலை!

04:40 PM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று அதானி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தியது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளிலிருந்தே அதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபடுவதும், பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது.

இன்றும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பிற்பகலுக்கு மேல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சப்தகிரி சங்கர் உலகா ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் அதானியின் உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்திருந்தனர்.

அவர்களிடம் ராகுல் காந்தி கிண்டல் செய்யும் விதமாக கேள்விகளை எழுப்பினார். உங்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என ராகுல் காந்தி கேட்கும் கேள்விக்கு, காங்கிரஸ் எம்பிக்கள் இருவரும், நாங்கள் எதனைச் செய்தாலும் ஒன்றாகவே செய்வோம். எங்களிடையேயான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என கிண்டலாகப் பதிலளித்தனர்.

தொடர்ந்து நாடாளுமன்றம் ஏன் முடக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கேள்வி கேட்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சபைக்கு வரவில்லை என கிண்டலடித்தனர். அதானி முகமூடி அணிந்த மாணிக்கம் தாகூர் எம்பி, நான் என்ன சொன்னாலும் அதை இவர் செய்வார் என மோடி முகமூடி அணிந்த எம்பியை சுட்டிக்காட்டி பேசினார். இது அங்கிருந்தவர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் இன்றையப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags :
AdaniCongress MPsMasksPM ModiRahul gandhi
Advertisement
Next Article