சாலை விபத்தில் எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தெலங்கானாவில் சோகம்!
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சாயண்ணா. அவரது மரணத்திற்கு பின்னர் அரசியலுக்கு வந்த அவரது மகள் லாஷ்யா நந்திதா, அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு, செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நந்திதா இன்று காலை பாசராவிலிருந்து கட்ச்பவுளிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார், சுல்தான்பூர் அருகே சாலை தடுப்பான் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த எம்.எல்.ஏ. நந்திதாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
இதையும் படியுங்கள் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - மதுரையில் நடத்த விஜய் திட்டம்?
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்திதா உடலை ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நந்திதா மரணத்திற்கு பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.