Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

01:40 PM Feb 22, 2024 IST | Web Editor
Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு,  "இதுகுறித்து பல முறை பேசி இருக்கிறோம், மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இங்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்,  பாமகவின் கருத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளனர்" என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசால் முடக்கப்பட்ட விவசாயிகளின் சமூக ஊடகங்கள் | உடன்பாடு இல்லை என X தளம் ட்வீட்!

பாமகவினர் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

" சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்,  ஜி.கே. மணி உள்ளிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.  சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.  உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.  மேலும், இந்த விளக்கத்திற்கு பின் பாமகவினர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது"  இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
CMOTamilNaduMKStalinTamilNaduTAMILNADUBUDGETThangamThenarasuTNAssemblyTNBudget2024
Advertisement
Next Article