மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!
மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் காங்கிரஸ், பாஜகவுக்கு முறையே 3வது மற்றும் 4வது இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியாகின.
இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.