MIvsRCB | பும்ராவை களம் இறக்கிய மும்பை அணி, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிக்கான லீக் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் அணி மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியளில் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதே போல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியளில் எட்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் லீக் போட்டி இன்று(ஏப்ரல்.07) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற மும்மை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில், ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், பும்ரா விக்னேஷ் புதூர் ஆகியோர் விளையாட உள்ளனர்.
பெங்களூர் அணியில், விராட் கோலி, ஃபில் சால்ட், தேவதத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் , ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.