MIvsKKR | டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்.31) ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தனது ஹோம் கிரவுண்டில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணியில், ரியான் ரிக்கல்டன் , வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
அதே போல் கொல்கத்தா அணியில், குயின்டன் டி காக்( விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமணீப் சிங் ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் விளையாட உள்ளனர்.