Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

MIvsGT | பேட்டிங்கில் தடுமாறிய மும்பை - குஜராத்துக்கு குறைந்தபட்ச இலக்கு!

குஜராத் அணிக்கு எதிராக 156 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:41 PM May 06, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, சும்பன் கில் தலைமையிலான குஜராத் அணியை இன்று(மே.06) எதிர்கொண்டு வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். அதன் பின்பு வந்த வில் ஜாக்ஸ் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வந்த திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, நமன் திர் ஆகியோர் சிங்கிள் டிஜிட்டில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனிடையே  கார்பின் போஷ் தனது பங்கிற்கு 27 ரன்கள் அடித்தார். தொடர்ந்து தடுமாற்றத்துடன் ஆடிய மும்பை அணி, இருபது ஓவர்களுக்கு 8 விக்கேட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்தது.

குஜராத் அணியில், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மற்ற பவுலர்கள் தங்கள் பங்கிற்கு தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 2வது இன்னிங்ஸில் 156 என்ற இலக்கை குஜராத் அணி சேஸிங் செய்ய உள்ளது.

Tags :
CricketgujarattitanshardikpandyaIPL2025MIvsGTMumbaiIndiansShubmanGill
Advertisement
Next Article