அரபிக் கடலில் ஏவுகணை சோதனை - தயார் நிலையில் இந்திய கடற்படை!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்களுக்கிடையே போர் பதற்றம் நிழவி வருகிறது. இந்த சூழலில் இந்திய கடற்படை அரபிக் கடலில் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய கடற்படை தற்போது, Kolkata-class destroyers, Nilgiri, Krivak-class frigates ஆகிய போர்கப்பல்களில் இருந்து அச்சுறுதல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகை காட்சிகளை பகிர்ந்துள்ளது.
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொலைதூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. நமது நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம் எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரபிக் கடலில் ஏவுகனைத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அறிவித்துள்ள சூழலில் இந்த ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியுள்ளது. அண்மையில் இந்தியா கடற்படை , ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.