Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone - எப்போது கரையை கடக்கும்?

06:27 PM Nov 30, 2024 IST | Web Editor
Advertisement

பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது.

Advertisement

வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜல் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
cyclone updateFengalFengal Cyclone
Advertisement
Next Article