Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!

10:39 AM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

கிளாம்பாக்கத்தில் உள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்: நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்...!

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் உள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை"  அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இம்முணையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக MTC மற்றும் SETC இடையே இணைப்புப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தி அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா,  தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Tags :
chengalpattuinspectsKalyankar Centenary Bus TerminalKilambakkamKilambakkamBusTerminusMinister Shekharbabu
Advertisement
Next Article