Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

12:48 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்த நிலையில்,  நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் பண பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர்பாக  ஜன. 8க்குள் பதிலளிக்க  அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி நோட்டீஸ் அனுப்பினார். மேலும்,  வழக்கை அன்றைய தினத்திற்கு நீதிபதி அல்லி ஒத்தி வைத்தார்.

ஏற்கெனவே,  அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை 2 முறை தள்ளுபடி செய்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 3-வது முறையாக அமைச்சர் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisement
Next Article