Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் விலக்கு, AIIMS கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!

04:08 PM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement

டெல்லி நிர்மான் பவனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய கட்டுமானம், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

Advertisement

இந்த சந்திப்பை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, 11 கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் முன்வைத்துள்ளோம். தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் தற்போது உள்ள நிலையில், 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. எனவே 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாமக்கல், திருப்பூர், விருதுநகரில் 150 மாணவர்கள் படிக்கும்படியான உள்கட்டமைப்பு உள்ள நிலையில் கூடுதலாக 50 இடங்கள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.தமிழகத்தில் மக்கள் தொகை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் கூடுதலாக ஊரக பகுதியில் ஆரம்ப சுகாதார மற்றும் கூடுதலாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நிறுவ கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழகத்தில் புற்றுநோய் கட்டமைப்பை மேம்படுத்த நிதி வழங்க கோரிக்கை, நரம்பியல் துறையை மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. கோவையில் AIIMS வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு அளிக்க மீண்டும் கோரிக்கை, அடுத்தமுறை நீட்தேர்வு நடத்த கூடாது. இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக மீண்டும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளை உன்னிப்பாக கவனித்த மத்திய அமைச்சர் , பரிசீலிப்பதாக தெரிவித்தார்” எனப் பேசினார்.

Tags :
AIIMSJP Naddaminister m subramanianNEET
Advertisement
Next Article