காலையில் காதிதம் பொறுக்கியவர்...பகலில் அரசு ஊழியர்... சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தெருவோரங்களில் காகிதம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தருக்கு, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜுலை 22) காலை சென்னை கிண்டியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தெருவோரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை பார்த்து வணக்கம் கூறினார். இதனையடுத்து அமைச்சர் உடனே அவரை அழைத்து விசாரரித்தார். அப்போது அவர் திருச்சியை சேர்ந்த ராஜா என்று தெரிவித்தார்.
அவரோடு பேசியதில், அவர் வேலையின்றி இருந்ததும், காகிதங்களை எடுக்கும் பணியை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து உணவு உண்டும், சாலையிலேயே உறங்கி வந்ததும் அமைச்சருக்கு தெரியவந்தது. அவரின் நிலையை அறிந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவரை அமைச்சரின் வாகனத்திலே தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். பின்னர் அமைச்சர் அவரை குளிக்க சொல்லி, அவருக்கு உடை மற்றும் உணவு வழங்கினார்.
பின் அவரை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்காலிக அடிப்படையில் ரூ 12,000 மாத சம்பளத்தில் அவரை வேலைக்கு சேர்த்துவிட்டார்.