நீலாங்கரையில் நிவாரண உதவிகளுடன் சிறுவர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய அமைச்சர் சி.வி.கணேசன்!
நீலாங்கரையில் வெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது சிறுவர், சிறுமியர்களுக்கு புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சென்னை மாநகராட்சி 15வது மண்டலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்
பொருட்களை வழங்கினார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், சென்னை மாநகராட்சி 15வது மண்டலக் குழு தலைவர் வி.இ.மதியழகன் ஆகியோரும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள வீட்டில் மழைநீர் புகுந்ததால், உடைகள் அனைத்தும் வீணாகி விட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். ஆகையால், நிவாரணப் பொருட்களில் சிறுவர்களுக்கு ஆடைகளை சேர்த்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
கந்தன்சாவடி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் ஆடைகள் எடுத்துக் கொடுத்து சிறுவர்களை வியப்பில் ஆழ்த்தினார். அமைச்சர் சி.வி.கணேசனிடம் கடை ஊழியர்கள் நீண்ட பில்லை கொடுக்க அதை சிரித்த முகத்துடன் பெற்றுக்கொண்டு, சுமார் ஒரு லட்சம் பணத்தை கட்டாக கடை ஊழியர்களிடம் வழங்கினார்.
அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். ஆடைகள் எடுத்துக் கொடுத்த அமைச்சருக்கு சிறுவர்களும், அப்பகுதி மக்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.