Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு தேதிகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்..!

10:24 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு தேதிகளை  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

Advertisement

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.  அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொது தேர்வு தேதியை அறிவித்தார்.

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள் தேதிகள் பின்வருமாறு :

12ஆம் வகுப்பு தேர்வுகள்

11ஆம் வகுப்பு தேர்வுகள்

10 ஆம் வகுப்பு தேர்வுகள்

தேர்வு தேதிகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்ததாவது..

"நெருக்கடி இல்லாத அளவு மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  வினா தாள்களில் எந்த வித தவறும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு பாட தேர்வுக்கும் 3 முதல் நான்கு நாட்கள் இடைவெளி விட்டுத்தான் தேர்வுகள் நடத்தப்படுகிறது

எந்த வித முறைகேடும் இல்லாத அளவில் தேர்வுகளை நடத்துவதில் கவனமுடன் இருக்கிறோம். தலைமை ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கையேடு கொடுக்கப்பட்டுள்ளது “ என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
10th Exam12th examEducationMinister Anbil MageshTamilNadu
Advertisement
Next Article