Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!

பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
10:57 AM Apr 02, 2025 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் அமைந்த்துள்ளது. இந்த கோயிலில் 60 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவானது வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

இந்த நிலையில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முனீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை முன்னே செல்ல முக்கிய வீதிகளில் வழியே வலம் வந்து அங்காள ஈஸ்வரி கோயிலை அடைந்தது. இதையடுத்து
அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஆலய தலைவர் புண்ணிய சேகரன் மற்றும் அறங்காவல் குழு தலைவர் மீவே.கருணாகரன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags :
#muneeswarar temple#padiyanallurfestivalthiruvalur
Advertisement
Next Article