Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செப்.17ம் தேதி மிலாது நபி விடுமுறை தினம் - #TNGovt அறிவிப்பு!

04:40 PM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் செப்.17-ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், செப்.16-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அரசு விடுமுறை 17-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு செப்.16-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.4ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்.16க்கு பதில், மறுநாள் செப்.17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு அரசு தற்போது செப்.17ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதில், செப்.17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Milad Un nabiMuslims Festival
Advertisement
Next Article