Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலி | அண்ணா பல்கலை தேர்வுகள் 9ஆம் தேதி வரை ஒத்திவைப்பு!

04:35 PM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.

பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் வழங்கப்படும் ரெகுலர் மற்றும் தொலைதூரப் படிப்புகளுக்கு இன்று (டிச.3) முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன.

Advertisement
Next Article