மிக்ஜாம் புயல் பாதிப்பு - மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம்!
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது.
இதையும் படியுங்கள் : “சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில்” -தெற்கு ரயில்வே அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகளில் மக்களுக்கு ரூ.6,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.