மிக்ஜாம் புயல் பாதிப்பு - சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று (டிச.11) இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர் இன்று (டிச.12) காலை சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: ஆருத்ரா மோசடி வழக்கு | விசாரணைக்கு ஆஜரான ஆர்.கே.சுரேஷிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?
இந்த ஆலோசனைக்கு பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாளத்தில் வெள்ளம் சூழ்ந்தது தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பார்வையிட்டனர்.
மத்திய குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் இருக்கிறார்.