Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MHC | சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு!

09:21 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 9-ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி.பாலாஜி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி.திலகவதி ஆகியோர்களை அந்த உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
draupadi murmujudgemadras highcourtNews7TamilPresidentSupreme court
Advertisement
Next Article