Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
12:19 PM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், சிறு குறு தொழில்நுட்பத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags :
108thbirth anniversarygovernmentMGRtamil nadu
Advertisement
Next Article