மெக்சிகோ : நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கர் லாரி - 8 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோ நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
07:45 AM Sep 12, 2025 IST
|
Web Editor
Advertisement
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த சாலையில் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதன்பின் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
Advertisement
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Article