Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று முதல் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும்!

08:18 AM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து மெட்ரோ நிர்வாகம், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chennai rainMetro
Advertisement
Next Article