Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

07:50 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்குப் பருவமழை கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

மேலும், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,   சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
districtsHeavy rainMeteorological Departmenttamil nadu
Advertisement
Next Article