மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு!
லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பரான 10-க்கு, அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் லியோனல் மெஸ்ஸி வென்று அசத்தினார்.
இந்த உலகக் கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தன. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகியது.
இதையும் படியுங்கள்: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | கட்டடங்கள் குலுங்கிய அதிர்ச்சி காட்சிகள்!
ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்தது. அந்த 6 ஜெர்சிகளில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகியதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பரான 10-ற்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது. அர்ஜென்டினா அணியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.