Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு - இத்தனை லட்சமா..?

08:00 PM Nov 08, 2023 IST | Student Reporter
Advertisement

டைட்டானிக் கப்பலில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியல் (மெனு) ரூ.53.28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட உள்ளது.

Advertisement

பிரபல டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறையின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலில் பயணித்த 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டைட்டானிக் தொடர்பான ஆய்வுகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக, அங்கு முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவுப் பட்டியல் ஏலத்திற்கு வரவுள்ளது.

இது தொடர்பாக விவரித்துள்ள ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், "லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப்பட்டியலை வைத்திருந்தது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது. அவர் இறந்த பிறகு அவரது உடைமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்த்தனர். அப்போது அவர் இந்த மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்:  9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி – ஆந்திராவில் கைது…!

ஏலத்திற்கு வர உள்ள உணவுப்பட்டியலில் ஆய்ஸ்டர்ஸ், மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த மெனு கார்டு, 60,000 யூரோக்கு (இந்திய மதிப்பில் ரூ.53.28 லட்சம்) ஏலம் விடப்பட உள்ளது.

 

Tags :
#titanicauctiondinner menufirst classfirst class dinner menufirst class menuMenuNEWS 7 TAMILnews 7 tamil update
Advertisement
Next Article