Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலால் சர்ச்சை!

03:16 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்றது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (டிச. 13) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில், “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. இது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது.

மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

Tags :
IndiaMenstrual CyclemenstruationMenstruation HygieneNews7Tamilnews7TamilUpdatesPaid LeaveparliamentSmriti IraniWomen Empowerment
Advertisement
Next Article