Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாதவிடாய் விடுப்பு சர்ச்சை : யாருக்கு என்ன தேவையோ அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்" - கனிமொழி எம்பி பேட்டி

02:05 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

மாதவிடாய் விடுப்பு சர்ச்சை இந்தியா முழுவது பேசு பொருளாக ஆகியுள்ள நிலையில் யாருக்கு என்ன தேவையோ அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி MP நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
உடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மயிலை வேலு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து
கொண்டனர்.

நிவாரண பொருட்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி தெரிவித்ததாவது..

சென்னையில் வீசிய புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக கட்சியும், தமிழ்நாடு அரசும் பலவித நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக
இன்று நிவாரண தொகை ரூ.6000 வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்  தொடங்கப்பட்டது.

பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை , எந்த முன்னேற்றமும்
இல்லை,விவசாயிகள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள், எல்லா தொழில் வளரச்சியும்
பாதிக்கப்பட்டுள்ளது.  மக்களுக்கிடயே ஜாதி, மத பிரச்சினைகளை தொடர்ந்து தூண்டி அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழலை பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

மாதவிடாய் காலங்களில் சில பெண்களால் வேலைக்கு செல்ல முடியும்,  சிலரால் செல்ல
முடியாது எனவே யாருக்கு என்ன தேவையோ அதைப் பொறுத்து வாய்ப்பை  உருவாக்க வேண்டும்.

இந்த நிவாரண தொகையை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவே முதலமைச்சர்
அறிவித்துள்ளார் . இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு  வழங்க வேண்டிய நிவாரண தொகையை வழங்கினால் ரூ.10,000
என்ன ரூ,20,000 கூட வழங்க  முதலமைச்சர் தயாராகவே உள்ளார் ” என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Tags :
DMKKanimozhi MPMenstral Leavemenstral paid leaveMenstration
Advertisement
Next Article