Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

09:59 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள்  அதிக ஆர்வம் காட்டி வருவதாக,  ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Advertisement

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு,  நாம் கடைகளில் சென்று பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது.  அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம்.

இந்நிலையில்,  ஆன்லைனில் ஷாப்பிங் என்றாலே பெண்கள் தான் என்ற எண்ணத்திற்கு ஆன்லைன் வர்த்தக நிறுவமான அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் முற்றுப்புள்ளி வைத்து ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.  இதில்,  ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதில் பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் மாசித் திருவிழா - விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!

இது குறித்து 'இந்தியப் பார்வை' என்ற பெயரில்  ஐஐஎம்ஏ வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் (CDT) ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டது.  இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள  25 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. இதில், 35,000 க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக ஆண்கள் சராசரியாக ரூ.2,484 செலவழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பெண்கள் செலவழிக்கும் ரூ.1,830 விட 36% அதிகமாகும்.  இந்த அறிக்கை, 47% ஆண்களும்,  58% பெண்களும் ஃபேஷன் ஆடைகளை வாங்கியுள்ளனர்.  23% ஆண்களும் 16% பெண்களும் மின்னணு சாதனங்களை வாங்கியுள்ளனர்.

டெல்லி,  மும்பை,  சென்னை போன்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது,  ஜெய்ப்பூர்,  லக்னோ, நாக்பூர்,  கொச்சி ஆகிய நகரங்கள் நுகர்வோர் ஃபேஷனுக்கு 63% அதிகமாகவும்,  மின்னணு சாதனங்களுக்கு ஆன்லைனில் 21% அதிகமாகவும் செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக இந்த அறிக்கையில் ஐஐஎம்ஏ வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் தெரிவித்துள்ளது.

Tags :
average spending'IIMAIndiamenOnline ShoppingPeopleSurveywomen
Advertisement
Next Article