Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அவரது நினைவுகளையும்,தேசபக்தியையும் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறேன்." - முகுந்த் வரதராஜன் மனைவி!

08:50 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

முகுந்த் வரதராஜனின் நினைவுகளையும்,தேசபக்தியையும் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறேன் என முகுந்த் வரதராஜன் மனைவி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’  திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : விடுமுறை தினம்... சென்னையில் முக்கிய சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

இந்த திரைப்படத்திற்கு 'அமரன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று 'அமரன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முகுந்த் வரதராஜன் யார் தெரியுமா ?

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, 'ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்' பிரிவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும் தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.

இதை தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத்துடன் போராடி மூன்றாவது பயங்கரவாதியையும் சுட்டுக் கொன்றார். காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். மேலும், அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரது கதையை தழுவியே சிவகார்த்திகேயனின் அமரன் உருவாகி வருகிறது. இதுகுறித்து முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் தெரிவித்தாவது :

"அமரன். என் நித்தியமானவன். இதை எப்படிச் சொல்வது என ஆயிரம் முறை யோசித்தேன். ஆனால், எப்போதும்போல் என் இதயத்திடம் விடுகிறேன். பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இப்போது அவரது நினைவுகளையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறேன். ஆனால், இந்த உற்சாகம் அழியாத துயரத்துடன், மாறாத நம்பிக்கையுடன், எல்லையற்ற அன்புடன் கலந்திருக்கும். ஒரு தகுதியான காரணத்திற்காக விலையுயர்ந்த ஒன்றை இழந்தோம். ஜெய்ஹிந்த்"

இவ்வாறு முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் பதிவிட்டுள்ளார்.

Tags :
#cinemaupdatesAmaranIndian ArmyKamalhaasanMajormemoriesMukund VaradarajanpatriotismRajkumarPeriyasamysivakarthikeyanSk21Teaserwife
Advertisement
Next Article